CSK vs MI : அண்ணே இவன் மட்டும் பைனலுக்கு வேண்டவே வேண்டாம் ! பிராவோ சொன்ன அதிர்ச்சி பதில் ?
நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் குவாலிபையர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநேற்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி குவாலிபையர் 2 போட்டிக்கு முன்னேறியுள்ளது
அந்த போட்டிக்கு பிறகான பேட்டியில், சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே தொடரும் போட்டி தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது
அதற்கு பதிலளித்து பேசிய பிராவோ, இறுதிப்போட்டியில் சென்னை அணிக்கு எதிராக மும்பை அணி களம் காண கூடாது என தனிப்பட்ட முறையில் நான் விரும்புகிறேன். மும்பை அணியை கண்டு நான் பயப்படுகிறேன் என்றார்
இரு அணிகளுக்கிடையே இதுவரை மொத்தம் 36 போட்டிகள் நடந்துள்ளன இதில் 20 முறை மும்பை அணியே வென்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது
ஐபிஎல் தொடரின் எல்-கிளாசிகோ எனப்படும் இந்த இரு அணிகள் விளையாடும் போட்டிக்கு, தொலைக்காட்சிகள் டிஆர்பி ரேட் எகிறும். டிஜிட்டல் தளங்களிலும் பார்வையாளர்களின் எண்ணிக்கை கோடிகளை கடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -