CSK pics: திருமண நிச்சயம்... வேட்டி அணிந்து வந்து நடனமாடிய சிஎஸ்கே வீரர்கள்.. லேட்டஸ்ட் பிக்ஸ்
2022 ஐபிஎல் தொடர் தொடங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஎனினும், நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, விளையாடிய 6 போட்டிகளில் 5 போட்டிகளில் தோல்வியைத் தழுவி ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றிருக்கிறது.
அடுத்து, வரும் வியாழக்கிழமை நடக்க இருக்கும் போட்டியில் சென்னை - மும்பை அணிகள் மோத உள்ளன. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் டெவன் கான்வேவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது.
இந்த நல்ல செய்தியை கொண்டாடும் விதமாக சென்னை வீரர்கள் புத்தாடைகளுடன், ஆட்டம் பாட்டத்தோடு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
சென்னை அணி வீரர்கள் தோனி, கான்வே, ருதுராஜ், பிராவோ என அனைவரும் வேட்டி, சட்டை அணிந்து வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
நியூசிலாந்து கிரிக்கெட் வீரரான டெவன் கான்வே, கிம் என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். அவருக்கு சென்னை அணி ரசிகர்கள் வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -