Indonesia open Badminton: இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டனில் கலக்கி வரும் இந்திய வீரர்கள்..!
ஜகார்தாவில் நடைப்பெற்று வரும் இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியின் இரண்டாம் சுற்று நேற்று நடைப்பெற்றது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅதன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பிரணாய் 21-18, 21-16 என்ற நேர்செட்டில் ஹாங்காங் வீரர் ஆங்குஸ் லாங்கை வெற்றிப் பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
அதே போன்று மற்றோரு 2 ஆவது சுற்று ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் 21-17, 22-20 என்ற நேர்செட்டில் லக்ஷயா ஷென்னை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
மேலும் இரட்டையர் பிரிவில் களமிறங்கிய இந்திய இணை சாத்விக் சாய்ராஜ் - சிராக் ஷெட்டி ஆகியோர் 21-17, 21-15 என்ற நேர்செட்டில் சீன வீரர்களான ஜி டிங் ஹீ - ஹோ டோங் சூ ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
அதே சமயம் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனையான சிந்து 18-21, 16-21 என்ற நேர்செட்டில் சீன தைபே வீராங்கனையான சூ யிங் டாயிடம் வீழ்ந்தார்.
மேலும் மற்றோரு இந்திய வீரரான ப்ரியன்ஷூவும் 2 ஆவது சுற்றுடன் வெளியேறி உள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -