யுவராஜ் சிங் முதல் ஷிவம் துபே வரை..கலப்பு திருமணம் செய்து கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள்!
யுவராஜ் சிங் முதல் ஷிவம் துபே வரை, கலப்பு திருமணம் செய்துகொண்ட இந்திய கிரிக்கெட் வீரர்களை பற்றி இங்கு காணலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமுன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், ஹேசல் கீச் என்ற கிறிஸ்தவ பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர் பின்னர் சீக்கிய மதத்திற்கு மாறி விட்டார். அதைதொடர்ந்து குர்பசந்த் கவுர் என தனது பெயரை மாற்றி கொண்டார் ஹேசல் கீச்.
முன்னாள் கிரிக்கெட் வீரரும் அரசியல்வாதியுமான முகமது அசாருதீன் சங்கீதா பிஜ்லானி என்ற இந்து பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இருவரும் 14 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து, பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர்.
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் 2007ல் நடந்த ஒரு நாள் உலக கோப்பை முடிந்த கையோடு, இந்து பெண்ணான சகரிகா காட்கேவை திருமணம் செய்து கொண்டார்.
இந்திய அணியின் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் சர்வதேச ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகல் கடந்த ஆண்டு 2021ல் திருமணம் செய்துகொண்டார். தீபிகா ஒரு கிறிஸ்தவ பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.பி.எல் மூலம் பிரபலமான ஷிவம் டூபே ஒரு இந்து பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவர். இவர் அஞ்சும் கான் என்ற இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்துள்ளார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -