Virat Records: இது கேப்டன் கோலியின் டி-20 ரெக்கார்ட்ஸ்
இந்திய அணியின் டி-20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appடி-20 கிரிக்கெட்டில் இந்திய அணி கேப்டனாக இதுவரை 45 போட்டிகளில் வழிநடத்திச் சென்றுள்ள கோலி, 27 போட்டிகளில் வெற்றியை பெற்று தந்துள்ளார். 14 போட்டிகளில் தோல்வியையும், 4 போட்டிகள் முடிவு எட்டப்படாமலும் முடிந்துள்ளது. டி-20 கிரிக்கெட்டில் இந்திய அணி கேப்டனாக விராட் கோலியின் வெற்றி சதவிகிதம் - 65.11 %
இந்திய அணியின் டி-20 கேப்டனாக அதிக ரன்கள் எடுத்த கேப்டன் என்ற ரெக்கார்டையும் கோலி தன்வசம் வைத்துள்ளார். 1421 ரன்கள் எடுத்திருக்கும் அவர், சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த கேப்டன்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
டி-20 கிரிக்கெட்டில், தோனி தலைமையில் 42 போட்டிகளிளும், கேப்டன் கோலி தலைமையிலான இந்திய அணி 27 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளது.
டி-20 கேப்டன் பொறுப்பில் இருந்தபோது அதிவேகமாக 1000 ரன்கள் எடுத்த ஒரே வீரர் கோலி. வெறும் 30 இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்டினார் விராட்.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, தென்னாப்ரிக்க நாடுகளில் டி-20 தொடர்களை வென்றுள்ள ஒரே இந்திய கேப்டன் விராட் கோலி.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -