2021 T-20 WC: ’ஸ்டைல்லா கெத்தா...புதிய ப்ளூ ஜெர்ஸி’ - புர்ஜ் கலிஃபாவில் இந்திய அணி
ஐக்கிய அரபு அமீரகத்தில், அக்டோபர் 17-ம் தேதி தொடங்கும் டி-20 உலகக்கோப்பை நவம்பர் 14-ம் தேதி வரை நடக்க உள்ளது. டி-20 உலகக்கோப்பையில் பங்கேற்க இருக்கும் 15 பேர் கொண்ட இந்திய அணி விவரத்தை பிசிசிஐ செப்டம்பர் மாதம் வெளியிட்டது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇன்னும் சில நாட்களில் உலகக்கோப்பை தொடர் ஆரம்பமாக உள்ள நிலையில், ஒவ்வொடு அணியும் டீம் ஜெர்ஸியை வெளியிட்டு வருகின்றது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸியை பிசிசிஐ நேற்று வெளியிட்டுள்ளது.
இந்த உலகக்கோப்பையில் இந்திய அணி அணியப்போகும் ஜெர்ஸி கிரிக்கெட் ரசிகர்களின் மனதை பெரிதாக கவரவில்லை. பெரும்பாலானோர் பழைய ஜெர்ஸியே சிறந்தது என கமெண்ட் செய்து வருகின்றனர்.
எனினும் இன்னும் சிலர் இந்த ஜெர்ஸி சிறப்பாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், புதிய ஜெர்ஸியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் எடுத்து கொண்ட புகைப்படங்களை உலகின் மிக உயரமான கட்டடமான துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவில் இன்று காட்சிப்படுத்தப்பட்டது.
டி-20 உலகக்கோப்பைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய அணி விவரம்: விராட் கோஹ்லி (கேப்டன்), ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், இஷான் கிஷன்,ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சஹர், ரவிசந்திரன் அஷ்வின், ஷர்துல் தாகூர், வருண் சக்கிரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, ஷமி, புவனேஷ்வர் குமார். பேக்-அப் வீரர்கள்: ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் சஹர், அக்சர் பட்டேல்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -