SMP Vs DD: இந்திரஜித்தின் அரைசத்தால் அபாரமாக வெற்றி பெற்றது திண்டுக்கல் டிராகன்ஸ்.
டி.என்.பி.எல் 7வது சீசன் திண்டுக்கல் நத்தம் என்.பி.ஆர் இன்ஜினியரிங் கல்லூரியில் மைதானத்தில் நடந்து வருகிறது. நேற்று 8வது போட்டியாக திண்டுக்கல் டிராகன்ஸ்கும் சீசெம் மதுரை பாந்தர்ஸ்கும் போட்டி நடைபெற்றது.
டாஸ் வென்ற திண்டுக்கல் அணியின் கேப்டன் அஷ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் களம் இறங்கிய மதுரை அணியின் தொடக்க ஆட்டகாரர் கார்த்திக் 4 ரன்களில் ஆட்டமிழக்க ஹரி நிஷாந்துடன் கைகோர்த்த ஜெகதீசன் கௌசிக் சிறப்பாக ஆடினார்.
ஹரி நிஷாந்த் 24 ரன்களில் ஆட்டமிழக்க ஜெகதீசன் கௌசிக் பொறுமையாக ஆடி 45 ரன்களில் வருன் சக்கரவர்தி சுழல் பந்தில் ஆட்டம் இழந்தார்.பின்னர் வந்தவர்கள் சொர்ப ரன்களில் ஆட்டமிழக்க 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ரன்கள் எடுத்தது மதுரை அணி.
இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க பாபா இந்திரஜித் மற்றும் ஆதித்யா கணேஷ் நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர்.
பின்னர் இருவரும் மதுரை அணியின் பந்துவீச்சை நாளா பக்கமும் சிதறடித்தனர். ஆதித்யா கணேஷ் 22 பந்துகளில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 22 ரன்களும், பாபா இந்திரஜித் 48 பந்துகளில் 4 சிக்சர்கள் 7 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் அடித்திருந்தார்.
பாபா இந்திரஜித் அதிரடி அரைசதத்தால் 14.1 ஓவரில் அபார வெற்றி பெற்றது திண்டுக்கல் டிராகன்ஸ்.