ஆஸ்திரேலியாவின் சாதனையை முறியடிக்குமா இந்தியா?
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் லீக் போட்டிகளில் தோற்காமல் உலகக்கோப்பை வென்ற அணியை பற்றி பார்ப்போம்.
உலகக் கோப்பை போட்டியில், ஒரு அணி 9 லீக் போட்டிகளில் விளையாடும். லீக் போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்களை பெரும் அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதிபெறும்.
இதில் ஐந்து முறை உலகக்கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணி முதலிடத்தை பிடித்துள்ளது. 2003ல் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நடந்த லீக் போட்டிகளில் தோற்காமல் உலகோப்பையை வென்றது.
இந்த வரலாற்றுச் சாதனையை ஆஸ்திரேலிய அணி மீண்டும் சேஸ் செய்தது. 2007ல் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தனது முந்தைய சாதனையை மீண்டும் முறியடித்தது. நடந்த அத்தனை லீக் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று உலகக்கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
இதுவரையில் ஆஸ்திரேலியாவின் இந்த சாதனையை எந்த அணியும் சேஸ் செய்ததில்லை. நடப்பு உலகக்கோப்பை தொடரில் நடந்த அத்தனை லீக் தொடரிலும் வென்றுள்ள இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது.
அரையிறுதி போட்டியில் வென்று உலகக்கோப்பையை வென்றால் ஆஸ்திரேலியாவின் சாதனையை இந்திய கிரிக்கெட் அணி முறியடிக்கும்.