Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
உலகக் கோப்பை தொடரில் அதிவேகமாக சதம் அடித்து அசத்திய இந்திய வீரர்கள்!
ஆண்கள் உலக்கோப்பை கிரிக்கெட் பிரிவில் அதிவேகமாக சதம் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலை பார்ப்போம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App13 வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. உலகக்கோப்பை வரலாற்றில் இந்திய அணிசார்பாக அதிவேகமாக சதமடித்த வீரர்களை காண்போம்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இரண்டாவதாக களமிறங்கிய ராகுல் 62 பந்துகளில் சதமடித்தார். உலகக்கோப்பை வரலாற்றில், இந்திய அணி வீரராக அதிவேகமாக சதம் அடித்து முதல் இடத்தை பிடித்துள்ளார் கே.எல்.ராகுல்.
இந்த பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா இரண்டாவது இடத்தில் உள்ளார். 2023 உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் ரோஹித் ஷர்மா 63 பந்துகளில் சதமடித்தார்.
இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர ஷேவாக் 2007 உலககோப்பையின்போது பெர்முடா அணிக்கு எதிராக 81 பந்துகளில் சதமடித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -