IND Vs WI : யாரும் எண்ணாத வகையில் இந்திய அணியை எளிமையாக வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ்!
நேற்று இந்தியாவுக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் இடையே இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக கூறியது.
இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன், சுப்மன் கில் சிறப்பாக ஆட்டத்தை தொடங்கினர். இருவரின் பாட்னர்ஷிப் 90 ரன்கள் வரை நீடித்தது. ஷுப்மன் கில் 34 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
சுப்மன் கில்லை தொடர்ந்து அடுத்தடுத்து வந்தவர்கள் அனைவரும் வந்த வேகத்தில் திரும்ப, 40.5 ஓவரில் இந்திய அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 181 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்த எளிமையான இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர்.
பிராண்டன் கிங் (15), கைல் மேயர்ஸ்(36) ரன்களுக்கு அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.பிராண்டன் கிங் (15), கைல் மேயர்ஸ்(36) ரன்களுக்கு அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த ஷாய் ஹோப், கீசி கார்ட்டி இருவரும் இனைந்து இந்திய வீரர்கள் வீசிய பந்தை நாளாபுரமும் சிதரடித்தனர்.
36.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்து வெஸ்ட் அணி வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஷாய் ஹோப் 80 பந்துகளில் 2 சிக்ஸர் 2 பவுண்டரியுடம் 63 ரன்கள் எடுத்தார், அவருக்கே ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.