அரை சதம் அடித்த கோலி சச்சினின் இரட்டை சாதனையை முறியடிப்பாரா?
நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிரடி காட்டிவரும் இந்திய அணி நடந்து முடிந்த அனைத்து லீக் போட்டிகளிலும் வென்றுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்த விராட் கோலி உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்தவர் பட்டியலில் 594 ரன்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார்.
இன்று நடைபெறும் அரையிறுதி போட்டியில் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் இரண்டு சாதனைகளை முறியடிக்க வாய்ப்பு உள்ளது.
இதுவரையில் தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் பயணத்தில் இளம் வயதில் 49வது சதத்தை பதிசெய்துள்ளார் விராட்
நடந்து கொண்டிருக்கும் அரையிறுதி போட்டியில் விராட் சதம் அடித்தால் சச்சின் டெண்டுல்கரின் 49வது சதத்தை முந்தி முறியடிக்கலாம்.
விராட் சதமடித்தால் தனது 50வது சதத்தை பூர்த்திசெய்வது மட்டுமல்லாமல் 2003 உலகல்கோப்பையில் 673 ரன்களை எடுத்த சச்சினின் மற்றொரு சாதனையும் முறியடிக்கலாம்.