Virat kohli : டி20-உலகக் கோப்பை போட்டிகளில் 22 இன்னிங்ஸில் ஆயிரம் ரன்கள் அடித்து கோலி புதிய சாதனை!
இந்தியா-தென்னாப்பிரிக்கா போட்டியில் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்தப் போட்டியில் விராட் கோலி 2 பவுண்டரிகள் அடித்து சிறப்பாக தொடங்கினார்.
எனினும் யாவரும் நிகிடி பந்தில் பெவிலியன் திரும்பி ஏமாற்றம் அளித்தார்.
எனினும் இந்தப் போட்டியில் 11 ரன்கள் எடுத்திருந்த போது டி20 உலகக் கோப்பை தொடரில் 1000 ரன்களை கடந்த முதல் இந்தியா வீரர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார்.
இதன்மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 1000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.
தற்போது வரை 24 டி20 உலகக் கோப்பை போட்டிகளில் 22 இன்னிங்ஸில் விளையாடி 1001 ரன்கள் குவித்துள்ளார்.
இவருக்கு முன்பாக இலங்கை அணியின் மகேலா ஜெயவர்தனே 1000 ரன்களை கடந்து உள்ளார்.
டி20 போட்டிகளில் எப்போதும் அதிரடி காட்டும் யுனிவர்செல் பாஸ் கிறிஸ் கெயில் 26 இன்னிங்ஸில் பேட்டிங் செய்து 965 ரன்களை இவர் விளாசி உள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -