NZ vs UAE : வரலாற்றில் முதல் முறையாக நியூசிலாந்து அணியை வீழ்த்திய ஐக்கிய அரபு அமீரகம்!
துபாயில், நியூசிலாந்து அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஐக்கிய அரபு அமீரகம் அணியை எதிர்த்து விளையாடி கொண்டிருக்கிறது. முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி முன்தினம் நடை பெற்றது. அதில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகளத்தில் இறங்கிய நியூசிலாந்து அணியின் வீரர்கள் சிறப்பாக ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
மார்க் சாப்மேன் மட்டும் ஒரு பக்கம் நின்று அணிக்காக போராட மற்றவர்கள் அனைவரும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.
20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்தது நியூசிலாந்து. அதிகபட்சமாக மார்க் சாப்மேன் 63 ரன்கள் எடுத்தார்.
பின்னர் களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரகம், ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.
முஹம்மது அஸீம் மற்றும் ஆசிப் கான் அதிரடியாக ஆடி அணியை 15.4 ஓவரில் வெற்றி பெற செய்தனர். இந்த வெற்றியே நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் வெற்றி என்பது குறிப்பிடதக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -