Ashes : 325 ரன்களில் ஆல்- அவுட் ஆன இங்கிலாந்து...முன்னிலையில் ஆஸ்திரேலியா!
இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது.டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அஸ்திரேலியா அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். ஆஸ்திரேலியா வீரர்கள் சிறப்பாக ஆட அணியின் எண்ணிக்கை 416 ஆக இருந்தது. அதிகபட்சமாக ஸ்டீவன் ஸ்மித் 184 பந்துகளில் 110 ரன்கள் எடுத்திருந்தார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராவ்லி,பென் டக்கெட் அணிக்கு வலுவான அடி தளத்தை அமைத்தனர். இரண்டாம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்திருந்தது .ஹாரி புரூக் 45 ரன்களுடனும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 17 ரன்களுடனும் களத்தில் நின்றனர்.
மூன்றாம் நாளான நேற்று மீண்டும் இங்கிலாந்து அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்துவார்கள் என்று உள்ளூர் மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், ஆட்டம் தொடங்கிய சில நிமிடத்திலேயே அனைவருக்கும் அதிர்ச்சி தரும் விதமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழந்தார்.
ஹாரி புரூக் 50 ரன்களுக்கு மிட்செல் ஸ்டார்க் பந்தில் பாட் கம்மின்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஆட்டம் தொடங்கிய ஒன்றரை மணி நேரத்தில் 76.2 ஓவரில் 325 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது இங்கிலாந்து.
பின்னர் 91 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்களான கவாஜா மற்றும் டேவிட் வார்னர் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். 63 ரன்கள் எடுத்திருக்கையில் டேவிட் வார்னர் 25 ரன்களில் ஆட்டமிழந்தார்
மறுமுனையில் கவாஜா சிறப்பாக அடி அரைசதம் அடித்தார்.மூன்றாம் நாளில் 45.4 ஓவர்கள் ஆடி 2 விக்கெட்டை இழந்து 130 ரன்கள் எடுத்து மொத்தம் 221 ரன்களுடன் நல்ல முன்னிலையில் இருந்தபோது போது மழை குறிக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.ஆட்டம் முடிவில் தொடக்க ஆட்டக்காரர் கவாஜா 58 ரன்களுடனும், துணை கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 4வது நாள் ஆட்டம் இன்று மதியம் இந்திய நேரப்படி 3:30 மணியளவில் தொடங்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -