Theekshana : ‘விராட் கோலி விக்கெட்டை வீழ்த்துவதே என் இலக்கு..’ அதிரடி பேட்டி கொடுத்த இலங்கை கிரிக்கெட் வீரர்!
இலங்கை அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளராக தற்போது வலம் வருபவர் மகீஷ் தீக்ஷனா
இவர் சமீபத்தில் நடந்த உலகக் கோப்பையின் தகுதி சுற்றில் சிறப்பாக ஆடி அணியை, உலகக் கோப்பை தொடருக்கு நுழைய உதவினார்.
அதுமட்டுமின்றி இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்
இந்த ஆண்டு ,சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர்களுள் ஒருவர் தீக்ஷனா.
சமீபத்தில் இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் தொடர் நடந்து முடிந்தது. இந்த தொடரின் போது, இலங்கை செய்தியாளர் ஒருவர், அடுத்து வரும் ஆசிய கோப்பை தொடரில் உங்களுடைய இலக்கு என்னவாக இருக்கும் என்று தீக்ஷனாவிடம் கேட்டார்.
இந்த கேள்விக்கு பதிலளித்த தீக்ஷனா, “வருகின்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்துவதே எனது இலக்கு”என்று கூறினார்.