HBD Shivam Dube: முப்பதாவது பிறந்தநாளை கொண்டாடும் சி.எஸ்.கே அணியின் ஆல்ரவுண்டர் ஷிவம் துபே!
சுபா துரை | 26 Jun 2023 02:47 PM (IST)
1
சி.எஸ்.கே அணியின் அதிரடி ஆட்டக்காரர்களுள் ஒருவர் ஷிவம் துபே.
2
மஹராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த ஷிவம் துபே, உள்நாட்டு கிரிக்கெட்டில் தன் சொந்த மாநிலத்திற்காக விளையாடுகிறார்.
3
இவர் 1993 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி மும்பையில் பிறந்தார். தனது 14 ஆவது வயதில் குடும்ப சூழ்நிலை மற்றும் தன் உடல் எடை காரணமாக கிரிக்கெட்டை கை விட்ட ஷிவம், தந்து 19 ஆவது வயதில் மீண்டும் கிரிக்கெட் விளையாட தொடங்கினார்.
4
சிறுது காலத்தில் மஹராஷ்டிரா கிரிக்கெட் அணியில் தேர்வான ஷிவம் துபே அவ்வாறு தனது கிரிக்கெட் பயணத்தை ஆரம்பித்தார்.
5
இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு தனது காதலியான அன்ஜும் கானை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1 வயதில் ஒரு மகனும் உள்ளார்.
6
இன்று ஐ.பி.எல் போட்டிகளில் ஜொலித்து வரும் ஷிவம் துபே தனது 30 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.