Rohit Sharma : ‘உலகக் கோப்பையை வெல்ல முயல்வோம்..’ வெற்றி பெறும் முனைப்பில் ரோஹித் ஷர்மா!
இந்தியாவில் வருகின்ற அக்டோபர் மாதம் உலகக் கோப்பை போட்டி நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளன.
இந்த உலகக் கோப்பையை பற்றி சமீபத்தில் பேசிய ரோஹித் ஷர்மா, “2023 உலக கோப்பை எனக்கும் மிகவும் முக்கியமான உலக கோப்பையாகும். கிட்டதட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் உலகக் கோப்பை போட்டி நடைபெருகிறது” என கூறினார்.
“2011 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் நான் தேர்வாக வில்லை. அது எனக்கு மிகவும் வருத்தத்தை அளித்தது. இருப்பினும் எனக்கு இந்தியா இறுதி போட்டியில் விளையாடி வெற்றி பெற்ற போது அந்த அனைத்து வேதனையும் பறந்து போனது” - ரோஹித்
“அதே போல் இந்த முறையும் இந்தியா, உலக கோப்பை வெல்லும் என்று நம்பிக்கை உள்ளது, ஆனால் அதற்கான வேலைகளை இந்திய அணி வீரர்கள் சரியாக செய்தால் மட்டுமே போதும்” - ரோஹித் ஷர்மா
“2015 மற்றும் 2019 ஆம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் அரை இறுதி போட்டி வரை சென்று வெளியேறினோம்” - ஷர்மா
“இந்த ஆண்டு எங்களால் முடிந்தவரை சிறப்பாக விளையாடி உலகக் கோப்பையை வெல்ல முயல்வோம்” என பேசி முடித்தார் இந்திய அணி கேப்டன் ரோஹித்.