Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Rachin Ravindra: உலகக் கோப்பையில் மூன்று சதங்கள்.. சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த ரச்சின் ரவீந்திரா..!
உலகக் கோப்பை வரலாற்றில் அறிமுகப் போட்டியிலேயே 3 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா படைத்துள்ளார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபெங்களூருவில் நேற்று பாகிஸ்தான் அணிக்கு எதிராக 94 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இது இந்த உலகக் கோப்பை 2023ல் ரச்சின் ரவீந்திராவின் மூன்றாவது சதமாகும்.
ரவீந்திரா இதற்கு முன்பு உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 116 ரன்களும், இங்கிலாந்துக்கு எதிராக 123 (நாட் அவுட்) ரன்களும் எடுத்தார்.
ரச்சின் ரவீந்திரா தனது 23வது வயதில் உலகக் கோப்பையில் 3 சதங்கள் அடித்த முதல் பேட்ஸ்மேன் ஆவார்.
நியூசிலாந்துக்காக உலகக் கோப்பையில் அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற பெருமையை ரச்சின் ரவீந்திரா பெற்றுள்ளார்.
இதற்கு முன், உலகக் கோப்பையில் எந்த நியூசிலாந்து பேட்ஸ்மேனும் 3 முறை சதம் அடிக்கவில்லை.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -