Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Murali Vijay : டெஸ்ட் நாயகன் முரளி விஜய்க்கு பிறந்தநாள் இன்று!
முரளி விஜய் 1984 ஏப்ரல் 1ஆம் தேதியன்று பிறந்தார். இவர் முன்னாள் இந்திய சர்வதேச கிரிக்கெட் வீரர் ஆவார் வலது கை பேட்ஸ்மேன் ஆன இவர் 2018 வரை இந்திய டெஸ்ட் அணியில் தொடக்க ஆட்டகாரர்ராக இருந்தார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App12ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்ததை அடுத்து 17 வயதில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய முரளி விஜய் தமிழ்நாடு 22 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் தேர்வாகினார்.
முரளி விஜய் 2006 இல் தமிழ்நாடு சீனியர் அணிக்காக விளையாடினார் 2006-07 ரஞ்சி டிராபியில் அதிக ரன்கள் எடுத்தவர்களில் ஒருவராக இருந்தார். தனது தனித்துவமான பேட்டிங் ஸ்டைலை வைத்து அனைவரையும் கவர்ந்தார்.
அக்டோபர் 2008ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கெளதம் கம்பீருக்கு பதில் இவர் தேர்வு செய்யப்பட்டார். முதல் டெஸ்ட் போட்டியில் சோர்ப்ப ரன்களை மட்டுமே எடுத்தார். டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ஜொலிக்கும் வீரராக இருந்தார் முரளி விஜய்
அதைபோல் முரளி விஜய்க்கு ஐபிஎலில் தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது. ஒட்டுமொத்தமாக 106 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 2619 ரன்கள் எடுத்துள்ளார். 121.87 ஸ்ட்ரைக் ரேட்டுடன் முரளி ஐபிஎலில் இரண்டு சதங்கள் மற்றும் 13 அரை சதங்கள் அடித்துள்ளார்.
30 ஜனவரி 2023 அன்று விஜய் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இன்று அவர் தனது 39 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -