MS Dhoni : தோனியின் உலக கோப்பை சிக்ஸருக்கு நினைவு சின்னம் அமைத்து மரியாதை!
கடந்த 2011 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் இலங்கை அணிக்கு இடையேயான உலக கோப்பை இறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைப்பெற்றது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅந்த போட்டியில் இலங்கை அணி 276 ரன்களை இந்திய அணிக்கு இலக்காக வைத்தது. இந்திய வீரர் கௌதம் கம்பீர் 97 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க கேப்டன் மஹேந்திர ஷிங் தோனியும் யுவ்ராஜ் ஷிங்கும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று இந்திய அணியை வெற்றி பெற செய்தனர்.
இதன் மூலம் இந்திய அணி 28 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது.
2011 உலக கோப்பையை திரும்பி பார்த்தால், பலருக்கும் தோனியின் அந்த கடைசி சிக்ஸர் தான் நியாபகம் வரும்
இந்நிலையில் தோனி அடித்த அந்த சிக்ஸரை கௌரவிக்கும் விதமாக மும்பை கிரிக்கெட் அசோசியேஷன் வான்கடே மைதானத்தில் நினைவு சின்னத்தை அமைத்துள்ளது.
கிரிக்கெட் பிரியர்களும், தோனியின் ரசிகர்களும் இந்த தகவலை பரவி வருகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -