Mahendra Singh Dhoni : தோனி சி.எஸ்.கே அணியில் இணைந்து 16 ஆண்டுகள் நிறைவு!
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் கிரிக்கெட் ஜாம்பவானான மஹேந்திர சிங் தோனி, ஐ.பி.எலில் சி.எஸ்.கே அணிக்காக விளையாடி வருகிறார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசி.எஸ்.கே அணிக்காக இவர் ஐந்து கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். இதனை அடுத்து தோனி சி.எஸ்.கே அணியில் இணைந்து இன்றோடு 16 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
2008 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ஐ.பி.எல் ஏலத்தில் சென்னை அணி அவரை 6 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.
அதன் பிறகு சென்னை அணி, ஐ.பி.எல்லின் டாப் அணியாக வலம் வந்தது.
தோனிக்காகவே சென்னை அணியின் ரசிகர்கள் பன்மடங்காக உயர்ந்தனர்.
தற்போது 16 ஆண்டுகள் கழிந்தும் தனது 42 ஆவது வயதிலும் தோனி, சி.எஸ்.கே அணிக்காக விளையாட தயாராக இருக்கிறார். தோனியின் இந்த 16 ஆண்டு கால ஐ.பி.எல் பயணத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -