நடப்பு உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்து அசத்திய வீரர்களின் பட்டியல்!
நடப்பு உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்களின் பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பிடித்த வீரர்களை பற்றி பார்ப்போம்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகளமிறங்கிய முதல் உலகக்கோப்பை போட்டியிலேயே அதிரடி காட்டிவரும் நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரன், நடப்பு உலகக்கோப்பை தொடரில் அதிக ரன் அடித்தவர்கள் பட்டியலில் 565 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.
தென் ஆப்பிரிக்காவின் அதிரடி ஆட்டக்காரர் குயின்டன் டி காக் இப்பட்டியலில் 550 ரன்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். நடப்பு உலகக்கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் பக்கபலமாக டி காக் இருந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.வரும் நவம்பர் 16 தேதி ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் அரையிறுதி போட்டியில் மோதவுள்ளது.
இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலி இந்த பட்டியலில் 543 ரன்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார்.நடப்பு உலகக்கோப்பை போட்டிகளில் அதிரடி காட்டிவரும் விராட் தனது 49 வது சதத்தின் மூலம் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னர் இந்த பட்டியலில் நான்காவது இடத்தில உள்ளார்.நடப்பு உலகக்கோப்பை தொடரில் நடந்த போட்டிகளில் மொத்தம் 446 ரன்களை அடித்துள்ளார்.வரும் நவம்பர் 16 தேதி அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோத உள்ளன.
இந்திய அணியின் கேப்டனும் இந்திய அணியின் தொடக்க வீரருமான ரோஹித் ஷர்மா 442 ரன்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதமடித்தர்களின் பட்டியலில் 30 சதங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -