Virat Kohli : 8வது முறையாக ஒரே ஆண்டில் 1000 ரன்கள்..அசாத்திய சாதனைகளை படைத்து வரும் கிங் கோலி!
ஐ.சி.சி ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இன்று இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மும்பை வாங்கடே மைதானத்தில் விளையாடி வருகின்றது.
இந்த போட்டியில் களமிறங்கிய விராட் கோலி 88 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இன்று அவர் விளாசிய ரன்களோடு அவர் இந்த நடப்பாண்டில் 1000 ரன்களை எட்டியுள்ளார்.
விராட், 8 ஆவது முறையாக ஒரே ஆண்டில் 1000 ரன்கள் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இதற்கு முன்னதாக அதிக முறை ஒரே ஆண்டில் ஆயிரம் ரன்களை அதிக முறை எட்டிய வீரர் என்ற சாதனையை சச்சினுடன் சமன் செய்திருந்தார் கோலி. தற்போது 8 ஆவது முறையாக இந்த சாதனையை நிகழ்த்தி சச்சினை பின்னுக்கு தள்ளியுள்ளார்.
விராட்கோலி 2011 ஆம் ஆண்டு, 2012ம் ஆண்டு, 2013ம் ஆண்டு, 2014ம் ஆண்டு, 2017ம் ஆண்டு, 2018ம் ஆண்டு, 2019ம் ஆண்டு என ஏற்கனவே 7 முறை ஒருநாள் போட்டிகளில் ஒரே ஆண்டுகளில் ஆயிரம் ரன்களை கடந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.