Asian Games: ஆசிய விளையாட்டிற்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு.. கேப்டனான ருத்துராஜ் கெய்க்வாட்!
19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் 23-ம் தேதி முதல் அக்டோபர் மாதம் 8-ம் தேதி வரை சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற உள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇதில், கிரிக்கெட் உட்பட மொத்தம் 40 வகையான விளையாட்டுகள் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில், நடப்பாண்டு ஆசிய விளையாட்டு போட்டிக்கு இந்திய சார்பிலும் அணிகள் பங்கேற்கும் என ஏற்கனவே இந்திய கிரிக்கெட் சம்மேளனம் அறிவித்திருந்தது. இதையடுத்து, ஆசிய விளையாட்டுக்குச் செல்லும் இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஆண்கள் அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று, மகளிர் அணிக்கு ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆடவர் அணி விவரங்கள்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஜெய்ஸ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் ஷர்மா, வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், ஆவேஷ்கான், அர்ஷ்தீப்சிங், முகேஷ்குமார், ஷிவம் மாவி, ஷிவம் துபே, பிரப்சிம்ரன் சிங். மாற்று வீரர்கள்: யாஷ் தாக்கூர், சாய் கிஷோர், சாய் சுதர்சன், வெங்கடேஷ் அய்யர், தீபக் ஹூடா .
மகளிர் அணி விவரங்கள்: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ், அமன்ஜோத் கவுர், தேவிகா வைத்யா, அஞ்சலி சர்வானி, திதாஸ் சாது, ராஜேஸ்வரி கெய்க்வாட், மின்னுமணி, கனிகா அகுஜா, உமா ஷெட்டி, அனுஷா பரேட்டி.
ஏற்கனவே எதிர்பார்த்ததை போன்று ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு, இந்திய கிரிக்கெட் சம்மேளனம் இரண்டாம் நிலை அணியை தான் அறிவித்துள்ளது. நட்சத்திர வீரர்கள் அனைவரும் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக மற்ற சர்வதேச போட்டிகளில் கவனம் செலுத்த உள்ளனர். இதன் காரணமாக, ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய பல்வேறு அணிகளை சேர்ந்த இளம் வீரர்கள், இந்திய அணிக்காக ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். அதேநேரம், மகளிர் பிரிவில் வலுவான அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -