Hardik Pandya in MI : தாயகம் திரும்பினார் ஹார்திக் பாண்டியா..உற்சாகத்தில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள்..!
2015 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி ஹார்திக் பாண்டியாவை 10 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅதன் பிறகு மும்பை இந்தியன்ஸில் சிறப்பான விளையாட்டை வெளிபடுத்தி 2015, 2017, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் அணியின் வெற்றிக்கு உதவினார் ஹார்திக்.
ஐ.பி.எல்லில் சிறந்த ஆட்டத்தை ஹார்திக் பாண்டியா வெளிபடுத்தவே அவருக்கு இந்திய அணியின் விளையாடுவதற்கு வாய்ப்புகள் கிடைத்தது.
அதன் பிறகு இந்திய அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கியமான ஆல்ரவுண்டராக திகழ்ந்த ஹார்திக் பாண்டியா, 2022 ஆம் ஆண்டு புதிதாக உருவான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக்கப்பட்டார்.அதே ஆண்டில் அந்த அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார் ஹார்திக்.
கடந்த சில நாட்களாகவே ஹார்திக்கின் ஐ.பி.எல் அணி குறித்து வெவ்வேறு கருத்துகள் பரவி வந்த நிலையில் ஹார்திக் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கே திரும்பி உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.து
இதனையடுத்து சுப்மன் கில்லை கேப்டனாக அறிவித்துள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -