Ind vs WI: வெஸ்ட் இண்டீஸிடம் தொடர் தோல்வியுறும் இந்தியா..அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appடாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில், பேட்டிங் செய்த இந்திய அணி, திலக் வர்மாவின் முதல் அரைசதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அடுத்ததாக களம் கண்ட சுப்மன் கில் 7, சூர்யகுமார் யாதவ் 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினர். அதே சமயம் இஷான் கிஷனால் 27 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் சார்பில் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் 40 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து தனது அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தார். மேற்கிந்திய தீவுகள் அணி 18.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய அணியை 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. இதன்மூலம், இம்முறை வெஸ்ட் இண்டீஸ் அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலை பெற்றது.
இந்த வெற்றியின் மூலம், இருதரப்பு தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தொடர்ந்து இரண்டு டி20 போட்டிகளில் இந்தியா தோல்வியடைந்தது இதுவே முதல்முறை.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -