'வா வா எதையும் சந்திப்போம்..'உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அடி எடுத்து வைத்த இந்தியா!
நியுசிலாந்து-இலங்கை இடையே ஆன டெஸ்ட் இல் 2 விக்கெட் வித்தியாசத்தில் நியுசிலாந்து வெற்றி பெற்றதன் மூலம் இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது..
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்தூரில் நடந்த பார்டர்-கவாஸ்கர் தொடரின் மூன்றாவது டெஸ்டில் இந்தியாவை 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து WTC இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் அணி ஆஸ்திரேலியா.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலின் முதல் இரண்டு அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
அதைத் தொடர்ந்து இப்போது இந்தியாவும் தகுதி பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஆன இறுதிப் போட்டி ஜூன் 7-ம் தேதி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஓவல் மைதானத்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி ரோஹித் ஷர்மா தலைமையில் பங்கேற்கும்.
WTC இன் இறுதிப் போட்டிக்கு இந்தியா வருவது இது இரண்டாவது முறையாகும். கடந்த முறை இறுதிப் போட்டியில் நியூசிலாந்திடம் தோற்றது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -