Virat Kohli in Test Cricket: ‘திரும்ப வந்த கோலி’ - கேப்டன் இன்னிங்ஸால் ரசிகர்கள் மகிழ்ச்சி
இந்தியா - தென்னாப்ரிக்கா அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளன. இந்த டெஸ்ட் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நேற்று தொடங்கியது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appடாஸ் வென்ற கேப்டன் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். நிதானமாக ஆடிய கேப்டன், 158 பந்துகளில் அரை சதம் கடந்து அசத்தினார்.
தென்னாப்ரிக்கா மண்ணில் தென்னாப்ரிக்காவுக்கு எதிராகவும், வெவ்வேறு இடங்களில் தென்னாப்ரிக்காவுக்கு எதிராக விளையாடிய போட்டிகளிலும், அதிக முறை அரை சதம் கடந்த இந்திய கேப்டன் என்ற ரெக்கார்டை தன்வசப்படுத்தி இருக்கிறார் கோலி.
தொடர்ந்து விளையாடிய அவர், 201 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து ரபாடா பந்தில் அவுட்டானார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில், கோலி மெதுவாக அரை சதம் கடந்த இரண்டாவது இன்னிங்ஸ் இது என்ற ரெக்கார்டு பதிவாகியுள்ளது. முன்னதாக, 2012-ம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 171 பந்துகளில் அரை சதம் கடந்திருப்பார். இதுவே டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலி மெதுவாக அரை சதம் கடந்த இன்னிங்ஸ்.
எனினும், சமீபத்தில் அவர் செய்து வந்த தவறான ஷாட் செலக்ஷன் போன்ற் தவறுகளை செய்யாமல், சிறப்பாக விளையாடி இருந்ததாக கோலியை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -