Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Gabba Test Memes: ’போன வருஷம், இந்நேரம்’ - சோசியல் மீடியாவை அலறவிட்ட 2021 காபா டெஸ்ட் மீம்ஸ்
1947-ம் ஆண்டில் இருந்து 7 போட்டிகளில் இந்திய அணி ஆஸ்திரேலியா பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் விளையாடி இருக்கிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇதில், 5 போட்டிக்ளில் தோல்வியையும், 1 போட்டி டிராவிலும் முடிந்திருக்கிறது. இதனால், கிட்டத்தட்ட 62 ஆண்டுகளுக்கு பிறகு காபா மண்ணில் இந்தியா வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியாவை பொருத்தவரை, தோல்வியில் ரெக்கார்டு செய்திருக்கிறது. 1988-ம் ஆண்டு காபாவில் வெஸ்ட் இண்டீஸிடம் தோல்வியை தழுவிய பிறகு 32 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிடம் சொந்த மண்ணில் தோல்வி அடைந்திருக்கிறது.
விராட் கோலி, அஷ்வின், ஜடேஜா, ஷமி, பும்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாமல் களமிறங்கிய ரஹானே தலைமையிலான இந்திய அணி, வரலாறு படைத்தது மறக்க முடியாத டெஸ்ட் கிரிக்கெட் சம்பவங்களில் இடம் பெற்றிருக்கிறது.
கடைசி டெஸ்ட் போட்டியில் சுபம் கில்லின் 91 ரன்கள், புஜாராவின் அரை சதம் கைக்கொடுக்க, கடைசி வரை ஆட்டமிழக்காமல் 89* ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தார் பண்ட்.
இதனால், கடைசி டெஸ்ட் போட்டியை வென்று, 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி நாடு திரும்பியது இந்திய அணி.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -