Indian Cricket Team pics: கேப்டனாக சாதிப்பாரா ரோகித்... பயிற்சியை தொடங்கிய இந்திய அணி
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி, ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபிப்ரவரி 6-ம் தேதி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரும், பிப்ரவரி 16-ம் தேதி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரும் தொடங்க உள்ளது.
ஒருநாள் அணி விவரம்: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷிகர் தவான், விராட் கோலி, சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர், சாஹல், குல்தீப் யாதவ் , வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 2வது ஒருநாள் போட்டியில் இருந்து கேஎல் ராகுல் களமிறங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜடேஜா முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக குணமடைந்து வரும் நிலையில், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட மாட்டார் என்றும், அவருக்கு பதிலாக அக்சர் படேல் டி20 போட்டிகளில் விளையாடுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -