IND vs WI, 1st T20 pics: ரோஹித் தலைமையில் இந்தியா சரவெடி... வெற்றி கணக்கில் அதிரடி!
ஈடன்கார்டன் மைதனாத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
20 ஓவர் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து, இந்திய அணிக்கு 158 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக பூரான் 61, கைல் மேயர்ஸ் 31, பொல்லார்ட் 24 ரன்கள் எடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து, இந்திய அணி களமிறங்கியது. தொடங்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, இஷான் கிஷன் களமிறங்கினார்கள். ரோகித் சர்மா தொடக்கம் முதலே அதிரடி காட்டினார்.
இறுதியாக 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் அடித்து வெற்றி இலக்கை 18.5 ஓவர்களில் அடைந்தது. வெற்றி இலக்கை சிக்ஸர் அடித்து முடித்து வைத்தார் வெங்கடேஷ் அய்யர். இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் தொடரில் 1 -0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
அதிகபட்சமாக ரோகித் 40, இஷான் கிஷன் 35, சூர்ய குமார் யாதவ் 34 ரன்கள் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் சேஸ் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அறிமுக போட்டியிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய ரவி பிஷ்னோய் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.