IND vs SL, 2nd Test: சொந்த மண்ணில் தொடர்ந்து 15வது டெஸ்ட் தொடர் வெற்றி.. அசத்தும் இந்திய அணி
பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெற்றது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்த போட்டியில், இந்திய அணி நிர்ணயித்த 447 ரன்கள் இலக்கை சேஸ் செய்த இலங்கை அணி 208 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.
இதனால், 238 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ஏற்கனவே, முதல் டெஸ்ட் போட்டியை வென்று முன்னிலை பெற்றிருந்த இந்திய அணி, இரண்டாது போட்டியையும் வென்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்திய மண்ணில் இந்திய அணி கடைசியாக 2012-13ம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்திற்கு எதிரான தொடரில் தொடரை இழந்து தோல்வி அடைந்திருந்தது.
இதற்கு பின்னர், கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணி உள்ளூரில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தோல்வி என்பதையே சந்தித்தது கிடையாது.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியுள்ள நிலையில், உள்நாட்டில் 15வது டெஸ்ட் தொடர் வெற்றியை பதிவு செய்து இந்திய அணி அசத்தி இருக்கிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -