Ashes 3rd Test : கடைசி நிமிடத்தில் அசத்தலாக விளையாடிய மூவர்..த்ரில் வெற்றி பெற்ற இங்கிலாந்து!
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லேவில் கடந்த 6 ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 263 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து 237 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
26 ரன்களுடன் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா மூன்றாம் நாள் பாதியில் 224 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து மூன்றாம் முடிவில் விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் அடித்திருந்தது
நான்காம் நாளான நேற்று இங்கிலாந்து அணி சிறப்பாக ஆடி போட்டியை வெற்றி பெரும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சற்று எமாற்றம் அளிக்கும் விதமாக இங்கிலாந்து ஆடியது.
இங்கிலாந்து 171 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்து தடுமாறிய போது கிறிஸ் வோக்ஸ் மற்றும் புரூக் சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தனர்.
ஸ்கோர் 230 ரன்கள் எட்டிய நிலையில் புரூக் 93 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் எடுத்து மிட்செல் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய மார்க் வுட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். 8 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட மார்க் வுட் 16 ரன்கள் அடித்து இங்கிலாந்துஅணியை வெற்றி பெற செய்தார். இந்த வெற்றியின் மூலம் 1-2 என்ற கணக்கில் வெற்றி ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.