Ashes : ஆல்- அவுட் ஆன ஆஸ்திரேலியா...முதல் இன்னிங்சிலேயே பதிலடி கொடுத்த இங்கிலாந்து!
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில், முதலில் பேட்டிங் இறங்கிய ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 399 ரன்கள் எடுத்திருந்தது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநேற்று இரண்டாவது நாள் ஆட்டத்தை ஸ்டீவன் சுமித், அலெக்ஸ் கேரி தொடங்கினர். ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலே 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் அலெக்ஸ் கேரி. பின்னர் வந்த செல் ஸ்டார்க் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தார். மறுமுனையில் ஸ்மித் நின்று ஆடி அவருடைய 32 வது சதத்தை பூர்த்தி செய்தார்.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் 2வது இடத்தில் உள்ள ஸ்டீவ் வாக்கை சமன் செய்தார். பின்னர் ஸ்மித் அவுட் ஆக டிராவிஸ் ஹெட் நிதானமாக ஆடினார். 100.4 ஓவரில் 416 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது ஆஸ்திரேலியா.
இரண்டாவது நாளில் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது இங்கிலாந்து அணி. முதல் டெஸ்ட் போட்டியில் தோல்விக்கான பதிலடியை கொடுக்கும் முனைப்புடன் சிறப்பாக ஆடியது.
ஆஸ்திரேலியா பந்துவீச்சை நாலா பக்கமும் சிதறடித்தனர் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள். இவர்களில் பார்னர் ஷ்ப் 91 ரன்களுக்கு பிரிந்தது.
சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தாலும் அணியின் ரன் வேகம் குறையவில்லை. இரண்டாம் நாள் முடிவில் 61 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் அடித்து வலுவான நிலையில் உள்ளது இங்கிலாந்து. அதிகபட்சமாக பென் டக்கெட் 98 ரன்கள் அடித்து ஆட்டமிழந்துள்ளார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -