Ravindra Jadeja : நான் செய்த தவறை நினைத்து வருந்துகிறேன்..இன்ஸ்டாவில் ஜடேஜா உருக்கமான பதிவு!
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமுதலில் நடந்த இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் ஒவ்வொரு போட்டிகளை வென்றுள்ள நிலையில் இன்று முன்றாவது போட்டி ராஜ்கோட்டில் தொடங்கியது.
இந்நிலையில் இன்று தனது முதல் போட்டியில் களமிறங்கிய சர்ஃபராஸ் கான் அரை சதம் அடித்தார், அதன் பின் அவர் 66 ரன்கள் எடுத்திருந்த நிலையி ஜடேஜா 99 ரன்கள் எடுத்திருந்தார்.
ஜடேஜா ஒரு ரன் எடுத்து சதத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் க்ரீஸை விட்டு வெளியேறினார் சர்ஃபராஸ். அப்போது சர்ஃபராஸ் ரன் அவுட் ஆனார்.
இதனை அடுத்து தன்னால் தான் சர்ஃபராஸ் அவுட் ஆனதாகவும், தனது தவற்றிற்கு மிகவும் வருந்துவதாகவும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஜடேஜா.
இவர் பதிவிட்டுள்ள இன்ஸ்டா ஸ்டோரி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -