முத்தையாவின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் சாம்பா!
உலகக்கோப்பை தொடர்களின் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வரும் சுழற்பந்து வீச்சாளர்களை பற்றி பார்க்கலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2007 உலகக்கோப்பை தொடரின்போது இலங்கை அணியின் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரன் மொத்தம் 23 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த சாதனையை இன்று வரை யாராலும் முறியடிக்க முடியவில்லை.
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரன் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் சாம்பா, இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் 22 விக்கெட்டுகளுடன் சர்வதேச கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டியில் சுழற்பந்து வீச்சு பிரிவில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
ஆஸ்திரேலியாவின் பிராட் ஹாக் 2007 ஆம் ஆண்டின் உலகக்கோப்பை தொடரின் போது 21 விக்கெட்டுகளை வீழ்த்தி முரளிதரனுக்கு பிறகு அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இப்பட்டியலில் பாகிஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரர் மற்றும் ஆல் ரவுண்டர் ஷாகித் அப்ரிடி 2011 ஆம் ஆண்டின் உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 21 விக்கெட்டுகளுடன் நான்காம் இடத்தில் உள்ளார்.
ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் ஷேன் வார்ன் 20 விக்கெட்டுகளுடன் கடைசி இடத்தில் உள்ளார். இவர் 1999ல் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் போது இந்த சாதனையை படைத்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -