Australia vs India : இளம் வீரர்களை களமிறக்கும் பிசிசிஐ...ஆஸ்திரேலியாவை வீழ்த்துமா இந்தியா?
ஆசிய இறுதிப் போட்டியில் கோப்பையை கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் அணி, அக்டோபரில் தொடங்க உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்தியா,ஆஸ்திரேலிய அணியுடன் 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளது.
இதில் மூத்த வீரர்களான கேப்டன் ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகியோருக்கு முதல் இரண்டு போட்டிகளுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
கே எல் ராகுல் ( கேப்டன் ), சுப்மன் கில் , ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி, திலக் வர்மா, பிரசித் கிருஷ்ணா, ஆர் அஷ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இந்திய அணியின் ஸ்குவாடில் உள்ளனர்.
உலக கோப்பையில் ஆடும் பிளேயிங் லெவனில் இடம் பிடிப்பதற்காக, இந்த ஆஸ்திரேலிய சிரீஸில், வீரர்கள் தங்களின் முழு திறமையையும் வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனுபவம் வாய்ந்த சுழற் பந்து வீச்சாளர் அஸ்வினை, உலக கோப்பைக்கு தேர்வு செய்யாதது கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், இதற்கு மத்தியில் ஆஸ்திரேலியா உடனான ஒரு நாள் தொடரில் தமிழக வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் இடம் பிடித்திருக்கிறார்கள்.இவர்கள் தங்களுடைய முழு திறமையையும் வெளிப்படுத்தும் பட்சத்தில், பிளேயிங் 11ல் இடம்பெறுவார்கள் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.