T.Nagar Padmavati Temple : சின்ன திருப்பதிக்கு அருகே வந்த அலமேலு மங்காபுரம்.. தனி சன்னிதானத்தில் மின்னும் பத்மாவதி தாயார்!
சின்ன திருப்பதி என்றழைக்கப்படும் தி.நிகர் பெருமாள் கோயிலுக்கு அருகில், பத்மாவதி கோயிலின் கும்பாபிஷேகம் 17 ஆம் தேதி பிப்ரவரி நடைபெறவுள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபழம்பெரும் நடிகை காஞ்சனா, திருப்பதி பெருமாளுக்கு காணிக்கையாக கொடுத்த சுமார் 40 கோடி ரூபாய் மதிப்புடைய நிலத்தில்தான் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது.
17-ம் தேதி நடைபெறும் இக்கோயிலின் கும்பாபிஷேக விழாவிற்கு, தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா என பல இடங்களில் இருந்து பக்தர்கள் மட்டுமல்ல, விவிஐபி-களும் குவிய இருக்கிறார்கள்.
திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள், சென்னையில் உள்ள வெங்கடாசலபதி கோயிலுக்கு வந்துச்செல்வர்.
நீண்ட காலமாக, சென்னையில் வெங்கடாசலபதி பெருமாளைத் தரிசிப்பவர்கள், அலமேலுமங்காபுரத்தில் உள்ள தாயார் பத்மாவதியின் தனி சன்னதி போல், சென்னையில் இல்லையே என்று வருத்தத்தில் இருந்தனர்.
திருவேங்கடத்தானைப் பார்ப்போர், பத்மாவதி தாயாரையும் தரிசித்து வரும் போதுதான், திருப்பதி யாத்திரை முழுமைப் பெறுகிறது என சான்றோரும் முன்னோரும் உறுதியாக கூறுவர்.
சென்னை தி. நகரில் உள்ள வெங்கட்நாராயண சாலையில் உள்ள பெருமாளை பார்த்துவிட்டு, அதற்கு அருகிலேயே பத்மாவதி தாயாருக்கும் கோயில் கட்டுவதற்கு TT தேவஸ்தானம் இடம் பார்த்து வந்தது.
அப்போதுதான் நடிகை காஞ்சனாவின் காணிக்கை தேவஸ்தானதிற்கு உரிய இடத்தைக் காட்டியது.
சுமார் 40 கோடி ரூபாய் மதிப்புடைய இந்த 6 கிரவுண்ட இடத்தில்தான் தற்போது TT தேவஸ்தானம் சார்பில், பத்மாவதி தாயார் கோயில் கட்டப்பட்டுள்ளது.
2 ஆண்டுகளாகக் கட்டப்பட்டு வந்த இந்தக் கோயில், மொத்தமுள்ள 6 கிரவுண்டு நிலத்தில் 3 கிரவுண்டு நிலத்தில் கோயிலும், மீதமுள்ள நிலத்தில் மண்டபம், சுவாமி வாகனங்கள் நிறுத்துமிடம், மடப்பள்ளி உள்ளிட்டவையும் கட்டப்பட்டுள்ளன.
கோயிலின் கருவறையில், திருச்சானூர் பத்மாவதித் தாயார் ஆலயத்தில் உள்ளது போன்றே தாயார் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -