Pitru Dosham : வாழ்க்கையே சிக்கலாக இருக்கா? அப்போ பித்ரூ தோஷம் இருக்குனு அர்த்தம்!
நம் குடும்பத்தில் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா என மூத்தவர்கள் யாரேனும் இறந்துவிட்டால், இந்து முறைப்படி புண்ணியதானம் செய்ய வேண்டும்.
அத்துடன் ஒவ்வொரு வருடம் அவர்கள் இறந்த தினத்தன்றும், ஒவ்வொரு மாதம் வரும் அமாவாசை அன்றும், புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை அன்றும் அவர்களை நினைவுக்கூறும் வகையில் சில சடங்குகளை செய்ய வேண்டும் என்பது நம்பிக்கை
இப்படி செய்யாவிட்டால் பித்ரூ தோஷம் ஏற்படும் என்பது நம்பிக்கை. இதனால் குடும்ப பிரச்சினை ஏற்படும், தீராத பிணி ஏற்படும், திருமணத்தடை ஏற்படும், விவாகரத்து ஏற்படும், கடன் பிரச்சினைகள் இருக்கும், வேலை வாய்ப்பு கிடைக்காது என்று சொல்லப்படுகிறது
ஏதாவது தடங்கல் ஏற்பட்டுக்கொண்டு இருக்கும், பொறுமையான வளர்ச்சி, பரம்பரை சொத்து பிரச்சினை, சட்ட சிக்கல் உள்ளிட்டவை உண்டாகும் என்றும் சொல்லப்படுகிறது
இதில் இருந்து விலக, இறந்த தினத்தன்றும், ஒவ்வொரு மாதம் வரும் அமாவாசை அன்றும், புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை அன்றும் அவர்களை நினைவுக்கூறும் வகையில் செய்ய வேண்டிய கடமைகளை செய்ய வேண்டும். இல்லாதவர்களுக்கு தானம் செய்வது சிறப்பு. அவர்களின் புகைப்படத்தை வீட்டின் தெற்கு திசையில் வைத்து ஒவ்வொரு நாளும் மரியாதை செலுத்த வேண்டும்.