Ayodhya Ram Temple: தங்க இழைகளால் நெய்யப்பட்ட உடையில் ராமர் - அயோத்தியில் அட்சய திருதியை கொண்டாட்டம்!
சித்திரை மாதம் வளர்பிறையில் வரும் திருதியை “அட்சய திருதியை” என்று அழைக்கப்படுகிறது. அட்சயம் என்றால் வளர்வது, பெருகுவது என்று அர்த்தம். அப்படியாக அட்சய திருதியை அன்று நாம் என்ன பொருள் வாங்கினாலும் அந்தப் பொருள் மிகவும் பெருகி வளம் சேர்க்கும். குறைவில்லாத செல்வத்தை அள்ளித் தரும் திருநாளாக அட்சய திருதியை போற்றப்படுகிறது. உத்திரப் பிரதேசத்தில் உள்ள புகழ்பெற்ற அயோத்தியா ராமர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடபெற்றது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appராம் லல்லாவுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சிறப்பான நாளில் பிரார்த்தனை செய்ய ராமர் கோயிலுக்கு வருகை புரிந்தனர்.
அட்சய திருதியை சிறப்பு நாளில் அசாம் மாநிலத்தின் பாரம்பரிய எரி மற்றும் மூங்கா சில்க் உடையில் குழந்தை ராமருக்கு அணிவிக்கப்பட்டிருந்தது. அவர் அணிந்திருந்த உடை தங்க இழைகளால் ஆனது என கோயிவில் நிர்வாகம் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருந்தது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு முதன் முறையாக அட்சய திருதியை விழா கொண்டாடப்பட்டது.
அட்சய திருதியை நாளில் குழந்தை ராமர் பக்தியுடன் பிரார்த்திக்குக் நோக்கத்தில் புனே உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து மாம்பழ ஜூஸ் மற்றும் அல்ஃபோன்சா மாம்பழம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 11 ஆயிரம் மாம்பழங்கள் குழந்தை ராமருக்கு வழங்கப்பட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -