Thanjavur Big Temple : தஞ்சாவூர் பெரிய கோயிலில் மகா சிவராத்திரி விழாவை ஒட்டி குவிந்த பொதுமக்கள்!
தமிழ்நாட்டில் உள்ள மிகவும் முக்கியமான சிவ ஸ்தலமாக தஞ்சை பெரிய கோயில் விளங்குகிறது. பெரிய கோபுரம், பெரிய லிங்கம், பெரிய நந்தி என மிகவும் பிரம்மாண்டமாக காணப்படும் இக்கோவில் இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App1000 ஆண்டுகளை தாண்டியும், தஞ்சாவூர் மண்ணில் கம்பீரமாக நிற்கும் இந்த கோயில் அந்த ஊரின் அடையாளமாகவே இருக்கிறது.
ஆன்மிக ஸ்தலமாகவும் சுற்றுலா ஸ்தலமாகவும் விளங்கும் இந்த இடத்தில் தினந்தோறும் மக்கள் கூட்டம் குவியும்
ஒவ்வொரு மாதமும் வரும் பிரதோஷம், சிவராத்திரி நாட்களில் இக்கோயில் விசேஷமாக காணப்படும்.
இந்நிலையில் 2024 ஆம் ஆண்டின் மகாசிவராத்திரி நேற்று (மார்ச் 8) கொண்டாடப்பட்டது. ஒரே நாளில் சிவராத்திரியும் மாத பிரதோஷமும் வந்ததால் தஞ்சை கோயிலில் பக்தர்கள் கூட்டம் குவிந்தது.
பிரதோஷத்தை ஒட்டி நந்தியம் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. பால் அபிஷேகம், மஞ்சள் அபிஷேகம் உள்ளிட்டவை செய்யப்பட்டது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -