Vinayagar Chaturthi 2023 : ‘விநாயகனே வினை தீர்ப்பவனே..’தமிழ்நாட்டில் களைகட்டும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்துடன் காட்சியளித்த புதுச்சேரி மணக்குள விநாயகர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி, திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவிலில் விநாயகருக்கு 150 கிலோ எடையுள்ள கொழுக்கட்டையை வைத்து பூஜை செய்தனர்.

சேலத்தில் தென்னந்தோப்புக்குள் 13 அடி தேங்காய்க்குள் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் அருகே அமைந்துள்ள ஏலேலசிங்க விநாயகர் கோவிலில் இன்று 15 லட்சம் மதிப்பில் புதிய ரூபாய் நோட்டுகளால் விநாயகருக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
கோவை பொன்னையாராஜபுரம் பகுதியில் ஒரு வீட்டில் வைக்கப்பட்டுள்ள ஜி 20 விநாயகர்
இன்று விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் உள்ள தேரடி வீதி, ரவுண்டானா ஆகிய பகுதிகளில் பூஜை பொருட்களை வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. இந்த ஆண்டு பூஜை பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளதால் சிறு குரு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு ராஜ கணபதி திருக்கோவிலின் மூலவருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருவண்ணாமலை இரட்டை பிள்ளையார் கோவிலில் இரட்டை பிள்ளையாருக்கு சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -