Mailam Therottam 2024 : மயிலம் தேரோட்ட திருவிழாவில் பங்குபெற்ற திரளான பக்தர்கள்!
விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வள்ளி தெய்வானை சுப்பரமணியர் சுவாமி கோவிலில் ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக கொண்டபடும் அந்த வகையில் இந்த வருட பங்குனி உத்திர திருவிழா நாளை நடைபெறுகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்த விழாவினை முன்னிட்டு மயிலம் முருகன் கோவிலில் கடந்த மார்ச் 15ஆம் தேதி கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. இந்நிலையில் பங்குனி உத்திர விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது.
முதலில் கோயிலின் வாயிலில் விநாயகர் தேரோட்டம் தொடங்கியபின் வள்ளிதெய்வானை சுப்பிரமணி முருகன் தேரோட்டம் நடைபெற்றது.
தேரோட்டத்தில் மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள், சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
தேரானது மலை மேல் அமைந்துள்ள முருகன் சன்னதியில் ஆரம்பிக்கப்பட்டு மலையினை சுற்றி வந்து மீண்டும் வாயிலில் முடிவுற்றது. தேரோட்டம் முடிந்து சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு தங்க கவசம் பொருத்தப்பட்ட வள்ளி, தெய்வானை சுப்பிரமணிய சுவாமி முருகனை பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர்.
இன்றையன தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்து மொட்டையடித்து நேர்த்தி கடனை செலுத்தினர். தேரோட்டதிற்காக 300 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -