தீபத் திருநாளையொட்டி விற்பனை செய்யப்படும் வண்ணமய விளக்குகள்!
தீபாவளி பண்டிகை முடிந்தவுடன், அனைவரும் ஆவலாக எதிர்ப்பர்க்கும் பண்டிகைதான் கார்த்திகை தீபம். கார்த்திகை மாதத்தில் வரும் முழு பெளர்ணமி அன்று இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகார்த்திகை தீபம் கொண்டாடப்பட பல காரணங்கள் சொல்லப்படுகிறது. இதிகாசங்களுடனும் புராணங்களுடனும் ஒவ்வொரு காரணமும் தொடர்புப்படுத்தப்படுகிறது.
இந்த பண்டிகை அன்று வீட்டில் விளக்கு ஏற்றுவது வழக்கம். திருவண்ணாமலையில், மகா தீபம் ஏற்றப்பட்டவுடன், வீட்டில் அனைவரும் விளக்கு ஏற்றுவது காலம்காலமாக நடைப்பெற்று வரும் ஒரு பழக்கமாகும்.
தொடர்ந்து மூன்று நாட்கள் வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும் என்பது ஐதீகம்.
இதற்கு தேவையான மண் விளக்குகளை உற்பத்தி செய்வதிலும் பெரும் வியாபாரம் நடக்கிறது.
கார்த்திகை தீபம் திருநாளை முன்னிட்டு விழுப்புரத்தில் பல்வேறு வகையான அகல் விளக்குகள் தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கலை நயத்துடன் மண்பானை செய்யும் தொழிலாளர்...
அழகான விளக்குகளுக்கு வர்ணம் பூசும்போது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் இது.
அகல் விளக்கு, சாயம் பூசப்பட்ட அகல் விளக்கு, அலங்காரத்திற்கு உதவும் அகல் விளக்கு, விளக்கு அணையாமல் இருக்க உதவும் கூம்பு வடிவிலான ஜாடிகள் என பலவிதமான பொருட்கள் தயார் செய்யப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் சந்தையில் விற்பனைக்காக ரெடியாக உள்ளது. தீபத்திருநாள் அன்று தங்கள் வீடுகளை ஜொலிக்க வைக்க மக்கள் இதனை வாங்கி செல்கின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -