Usha JD Vance : அமெரிக்க துணை அதிபர் வேட்பாளரின் மனைவி இந்தியாவை பூர்வீகமாக கொண்டவரா?
தனுஷ்யா | 19 Jul 2024 10:45 AM (IST)
1
நவம்பர் மாதம் அமெரிக்காவில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ரிபப்ளிகன் கட்சியை சார்ந்த டோனால்ட் ட்ரம்ப், ஜே.டி.வான்ஸ் என்பவரை துணை அதிபர் வேட்பாளராக நியமித்துள்ளார்.
2
இதனையடுத்து ஜே.டி.வான்ஸ் என்பவர் யார் என்ற தேடல் இணையத்தில் அதிகரித்துள்ளது.
3
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் ஜே.டி.வான்ஸ் 2014 ஆம் ஆண்டில் உஷா எனும் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
4
யேல் பல்கலைகழகத்தில் ஒன்றாக சட்டம் படித்த இருவரும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். இந்த ஜோடிக்கு இவான், விவேக், மிராபெல் ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.
5
டோனால்ட் ட்ரம்ப் தேர்தலில் வெற்றி பெற்றால் உஷா வான்ஸ் இரண்டாவது குடிமகளாக கருதப்படுவார். உஷா, இந்தியாவில் இருந்து சான் ஃபிரான்சிஸ்கோவிற்கு புலம் பெயர்ந்த குடும்பத்தை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.