Diwali in white house: வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம்; லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
தீபாவளியை ஒட்டி வெள்ளை மாளிகையில் மிகப்பெரிய அளவில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் ஜோ பிடன் நிர்வாகத்தைச் சேர்ந்த பல இந்திய அமெரிக்கர்கள் கலந்து கொண்டனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஉங்களுக்கு விருந்தளிப்பதில் பெருமையடைகிறோம். இதுவே வெள்ளை மாளிகையில் நடைபெறும் முதல் பிரமாண்டமான தீபாவளி நிகழ்ச்சி.
வரலாற்றில் முன்னெப்போதையும் விட அதிகமான ஆசிய அமெரிக்கர்கள் இங்கு உள்ளனர், தீபாவளி கொண்டாட்டத்தை மகிழ்ச்சியான பகுதியாக மாற்றியதற்கு நாங்கள் உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடன் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடும் வரவேற்பு நிகழ்ச்சியில் கூறினார்.
”தீபாவளி என்பது அமெரிக்காவாக இருந்தாலும் சரி, உலகம் முழுவதும் இருந்தாலும் சரி, உலகிற்கு ஒளியைக் கொண்டுவரும் ஆற்றல் நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது என்பதை நினைவூட்டுகிறது என குறிப்பிட்டார்.
பிரார்த்தனைகள், நடனங்கள், வாணவேடிக்கைகள் மற்றும் இனிப்புகளுடன், தீபாவளியைக் கொண்டாடும் அனைவருக்கும், சமூகத்தின் பெருமையை உணரவும், அனைவரும் எப்போதும் ஒன்றாக தோளோடு தோள் சேர்த்து நிர்க்கவும் நினைவில் கொள்ள வேண்டும் என்று பிடன் கூறினார்.
இதில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.
தீபாவளி வாழ்த்து..
விளக்குகள் ஏற்றி கொண்டாடப்பட்ட தீபாவளி- ஜோ பைடன், ஜில் பைடன், கமலா ஹாரிஸ்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -