UAE's Hindu Temple: அபுதாபியில் முதல் இந்து கோயில்; 7 பிரமாண்ட கோபுரங்கள் - சுவாரஸ்ய தகவல்கள்!
ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் இந்து கோயிலாக BAPS சுவாமிநாராயண் மந்திர், அபுதாபியில் பிரமாண்டமாக கட்டி எழுப்பப்பட்டுள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகலாச்சார பன்முகத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மையைக் குறிப்பது மட்டுமல்லாமல், இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. வரும் 14 ஆம் தேதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் BAPS மந்திர் திறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
32.92 மீட்டர் (108 அடி) உயரம், 79.86 மீட்டர் (262 அடி) நீளம் மற்றும் 54.86 மீட்டர் (180 அடி) அகலம் கொண்ட இந்த கோயில், RSP Architects Planners & Engineers Private Limited மற்றும் Capital Engineering Consultants ஆகிய நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பண்டைய இந்து வேதங்களான ஷில்பா சாஸ்திரங்களின் அடிப்படையில் கட்டுமான பணிகள் நடைபெற்றுள்ளன.
மேற்கு ஆசியாவின் மிகப்பெரிய இந்து கோயிலாக அமைக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்டமான கட்டிடத்தில் ஒரே நேரத்தில் 10,000 பேர் வரை தங்கலாம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஏழு அமீரகங்களை குறிக்கும் வகையில், இந்த கோயிலில் ஏழு கோபுரங்கள் உள்ளன.தொடர்ந்து 18ம் தேதி முதல் பக்தர்கள் கோயில் அனுமதிக்கப்பட உள்ளனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -