Turkey Earthquake : துருக்கி மக்களை துயரப்படுத்திய நிலநடுக்கம்..இணையத்தில் வெளியான பதைபதைக்க வைக்கும் புகைப்படங்கள்!
இன்று அதிகாலை மத்திய துருக்கியில் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்த நிலநடுக்கம் காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகி நகருக்கு கிழக்கே 26 கி.மீ தொலைவில் 17.9 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதில் பலியானோரின் எண்ணிக்கை காலை 9 மணி நிலவரப்படி 15 பேர் என தெரிவிக்கப்பட்டது.
சேதம் மற்றும் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் எனவும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது
துருக்கியில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இஸ்ரேல் மற்றும் லெபனான் வரை இந்த நடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
பலரும் துருக்கி மக்களுக்கு ஆறுதல் கூறிவருகின்றனர்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -