ஆஃப்கான் தெருக்களில் ஆட்டம் போடும் தலிபான்கள்! - புகைப்படங்கள்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து முழுமையாக வெளியேறியதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அறிவித்தது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅமெரிக்க தூதர் மற்றும் ராணுவ அதிகாரிகள் அடங்கிய கடைசி விமானம் ஆகஸ்ட் 31 இரவு ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியது.
ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் அமெரிக்கர்களை மீட்பதுடன் முழுமையாக வெளியேறுவோம் என்று அதிபர் ஜோ பைடன் அறிவித்திருந்தார்.
கடைசி அமெரிக்க ராணுவ வீரர் காபூலில் இருந்து வெளியேறும் படத்தை அமெரிக்க ராணுவம் பதிவிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா பல லட்சம் கோடி ரூபாய் செலவழித்த நிலையில் 20 ஆண்டுகால போர் முடிவுக்கு வந்துள்ளது
ஆப்கான் மக்களுக்கு தேவையான உதவிகளை ஐநா சபை மற்றும் என்ஜிஓக்கள் மூலம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்றும் அமெரிக்கா உறுதி அளித்துள்ளது.
இதனைதொடர்ந்து, அமெரிக்கர்கள் வெளியேறியதை கொண்டாடும் விதமாக காபூலில் தலிபான்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
அமெரிக்கப்படைகள் வெளியேறியதை அடுத்து தலிபான்கள் ஆஃப்கன் தெருக்களில் துப்பாக்கிகளுடன் வலம் வந்துகொண்டிருக்கிறார்கள்
அண்மையில் செய்தி ஊடகம் ஒன்றில் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவருடன் சேர்ந்து தலிபான்களும் துப்பாக்கியுடன் தோன்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -