Super Blue Moon : இன்று காட்சியளிக்கும் சூப்பர் ப்ளு மூன் நீல நிறத்தில் இருக்குமா?
ஒரே மாதத்தில் தெரியும் இரண்டாவது முழு நிலவை ப்ளூ மூன் என அழைக்கின்றனர். இது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வானில் நிகழும்.
வழக்கத்திற்கு மாறாக நிலவு சற்று அருகில் பூமியை சுற்றுகிறது. அதாவது பூமியிலிருந்து 3,57,244 கிமீ தொலைவில் சுற்றுகிறது நிலவு.
பூமிக்கு நெருக்கமாக நிலவு சுற்றுவதும் ப்ளூ மூன் நிகழ்வும் இணைந்து சூப்பர் ப்ளூ மூன் என்று அழைக்கப்படுகிறது.
இன்று ப்ளூ மூன் நிகழ்வு நடக்கவிருக்கிறது. அதனால் இன்று நிலவு எப்போதும் தெரிவதை விட 14% பெரிதாக தெரியும்.
ப்ளூ மூன் என்றால் நீல நிறத்தில் நிலவு தெரியும் என பலரும் நினைக்கின்றனர். ஆனால், ப்ளூ மூன் என்பது நிலவு சற்று பிரகாசமாக இருக்கும். அவ்வளவு தான்.
சூப்பர் ப்ளூ மூன் நிகழ்வு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நிகழும். இன்று இரவு 8.37க்கு தெரியும் சூப்பர் ப்ளூ மூன் இதற்கு பிறகு ஜனவரி 2037 ஆம் ஆண்டில்தான் தெரியும்.